சொகுசு ரயிலில் ஒரு ஆடம்பர சுற்றலா

golden-chariot1 கர்நாடக சுற்றுலா மேம்பாட்டு வாரியத்தால் இயக்கப்படும் இந்த ரயில் கர்நாடகத்தில் இருந்து கோவா வரையிலான சுற்றுலா இடங்களை இணைக்கும் வகையில் பெங்களூரில் இருந்து கோவாவுக்கு சென்று வருகிறது.

மற்ற சொகுசு ரயில்களில் இல்லாத கூடுதல் வசதியாக ஆயுர்வேத சிகிச்சை மையம், உடற்பயிற்சிக் கூடம், உடல் ஊனமுற்றோரும் பயணிக்க சிறப்பு கேபின் ஆகியவை இதில் இருப்பது சிறப்பம்சம். இதில் இதுவரை பயணம் செய்தவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கையைவிட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையே அதிகம்.

2010ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வரும் இந்த ரயில், இரண்டு வகையான சுற்றுலா தலங்களுக்கு இயக்கப்படுகிறது.
அதாவது, 7 இரவுகளைக் கொண்ட தெற்கு கோல்டன் சாரியட் ரயில் என்ற பெயரில் பெங்களூரில் இருந்து கோவாவுக்கும், 7 இரவுகளைக் கொண்ட தெற்கு ஸ்ப்லெண்டர் கோல்டன் சாரியட் என்ற ரயில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா போன்ற பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.

கோல்டன் சாரியட் ரயிலில் சுற்றுலா
முதல் நாள் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, கபினி, மைசூர், ஹசன், ஹோஸ்பெட், ஹம்பி, தடாக், பட்டாட்கல், படாமி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக வந்து 7வது நாள் கோவாவை அடையும். இதற்கிடையே உள்ள அனைத்து சுற்றுலாப் பகுதிகளையும் சுற்றுலா தலங்களைக் காணலாம்.

golden-chariot2கபினி புலிகள் சரணாயலம், மைசூர் அரண்மனை, ஸ்ரீரங்கப்பட்டிணம் கோட்டை, லலிதா மகால் அரண்மனை ஹோட்டல், விருப்பாக்ஷா கோவில், யானைகள் இருப்பிடம், ஹசாரா ராமா கோவில், விடாலா கோவில், படாமி குகைகள், கோவாவில் உள்ள பழைய தேவாலயங்கள், போர்த்துக்கீசிய காலத்து வீடுகள், என பல்வேறு இடங்களைக் காணலாம்.
தெற்கு ஸ்ப்லெண்டர் கோல்டன் சாரியட் ரயிலில் சுற்றுலா

பெங்களூருவில் இருந்து துவங்கி, சென்னை மகாபலிபுரம் கோயில்கள், புதுச்சேரி கடற்கரை, ஆரோவில் மடம், காவேரி நதிக்கரையில் அமைந்துள்ள கோயில்கள், தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயில், கலை வேலைப்பாட்டுக் கூடங்கள், அங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயம் மற்றும் கோவளம் கடற்கரை, கேரள கடற்கரைப் பகுதிகளான ஆலப்பே ஜெட்டி பாயிண்ட், கொச்சின், மாடிவெல் தேவாலயம் ஆகியவற்றை பார்த்து ரசித்துவிட்டு 7வது நாள் பெங்களூரு திரும்பலாம்.

மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள goldenchariottrain.com இணைய தளத்தைப் பார்க்கலாம்.

சொகுசு ரயிலில் ஒரு ஆடம்பர சுற்றலா